மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

காய்கறிகளைப் புதிது போன்று வைத்திருக்கும் பெட்டகம்!

காய்கறிகளைப் புதிது போன்று வைத்திருக்கும் பெட்டகம்!

குளிர்பதனம் ஏதுமில்லாமல் இரண்டு நாள்களுக்குக் காய்கறிகளைப் புதிது போன்று வைத்திருக்க உதவுகிறது காய்கறிகள் சேமிப்புப் பெட்டி.

இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் குழுவால், காய்கறிகளைப் புதிது போன்று சேமிக்கும் பெட்டிகளை உருவாக்க உயர்தர பாலிமர் பொருள் பயன்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் போல் இல்லாமல் இருக்கும் இந்தச் சேமிப்புப் பெட்டி மணமற்றதாகவும் இருக்கிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு மற்றும் இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் கீரைகள், காய்கறிகள் நீண்ட நாள்கள் புதிது போன்று வைத்திருக்க இந்தச் சேமிப்புப் பெட்டி உருக்கப்பட்டது. இந்த சேமிப்புப் பெட்டி அதி ஈரப்பதம் கொண்டுள்ளதால், அறை வெப்பநிலையில் 48 மணி நேரம் வரை கீரைகள் புதியதாக இருக்க உதவும்.

காய்கறிகளின் தரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை சேமிப்புப் பெட்டியால் பாதிக்கப்படாது. சேமிப்புப் பெட்டியில் 12 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகளைச் சேமிக்க முடியும். இது உற்பத்தி மற்றும் ரூ.10,000 வரை விலை வருகிறது. உயர் வெப்பநிலை கொண்ட பகுதிகளில், 6 முதல் 8 டிகிரி வரை வெப்பநிலையைக் குறைக்க ஜெல் பொதிகளைப் பயன்படுத்தலாம் என தி இந்து பிஸினஸ் லைன் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

“ஒரு சில மணி நேரத்துக்குள் வாடிவிடுவதால் காய்கறிகளைப் பசுமையாக வைத்திருப்பது கடினம். இந்தத் தொழில்நுட்பம் காய்கறிகளின் புத்துணர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துகளைப் பாதுகாக்க உதவுகிறது. காய்கறிகளின் இழப்புக்களைக் குறைப்பதன் மூலம் ஒரு பொருளாதார கண்ணோட்டத்தில் இருந்து இந்தத் தொழில்நுட்பம் நமக்கு உதவுகிறது” என்று விக்னேஷ் குமார் மனோகரன் தெரிவித்தார். மூன்று கடைகளில் இந்தச் சேமிப்புப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017