மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

வெள்ளை கிரானைட் தரையில்

ரோசாப் பூ டிசைன்ஸ்.

தத்தி தத்தி நடக்கும்

சின்னக் குழந்தை பாதங்கள் கொள்ளை அழகு.

நம் பாதத்தையும் எல்லா நேரங்களும் அவ்வளவு கொள்ளை கொள்ளும் அழகாக பார்த்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கான முறைகளை பார்ப்போமா...

குளிக்கும்போது மட்டுமன்றி கால்களைத் தினமும் 3, 4 தடவை சோப் போட்டுக் கழுவுங்கள்.

பாத விரல்கள் அழுக்காக இருந்தால் எலுமிச்சைப் பழச்சாறு தடவி வரலாம்.

வாரத்துக்கு ஒருமுறையாவது பாதங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களை இளஞ்சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து மசாஜ் செய்தால் பாதங்களிலுள்ள அழுக்குகளை நீக்கலாம்.

பின்பு குதிகாலை தேய்த்துச் சுத்தப்படுத்தவும். இதன்மூலம் பாதங்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். நல்ல தரமான செருப்புகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

கால் பாதங்களில் பித்த வெடிப்பை அகற்ற வெந்நீரில் சிறிது அளவு ஷாம்பூவைக் கலந்து அரைமணி நேரம் காலை அதில் ஊற வைத்து கல்லில் தேய்த்தால் ஒரு மாதத்தில் வெடிப்புகள் மறைந்து விடும்.

பாதங்களில் வாஸ்லின் க்யூட்டிகல் க்ரீம் பாராபின் எண்ணெய் பெட்ரோலியம் ஜெல்லி ஆகிய அனைத்தையும் தடவ வேண்டும்.

ஒரு கரண்டி தயிரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து கால் பாதங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து அலசவும்..

சிலருக்கு வெயிலினால் கால்கள் வறண்டு போய் சொர சொரப்பாக இருக்கும். அவங்க நல்ல பழுத்த ஆப்பிளை தோலுடன் அரைத்து கை கால்களில் பூசிக்கொள்ளலாம்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017