மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

பட்டாசுத் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்!

பட்டாசுத் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்!

பட்டாசுத் தொழிலாளர்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீபாவளியின்போது காற்று மாசு அதிகரிப்பதாகக் கூறி பட்டாசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 5ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு கோரியும் சிவகாசியில் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் தொடங்கியுள்ள வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் நேற்று (டிசம்பர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் சுமார் 850 ஆலைகளில்தான் நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவிகிதம் உற்பத்தியாகிறது. இந்தத் தொழில் நேரடியாகவும், சார்புத் தொழில் மற்றும் விற்பனை சார்ந்தும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.

சமீபத்திய மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் காரணமாக தொழிலாளர்கள் சம்பளமின்றி கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். தற்போது சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுதலை முன்னிறுத்தி உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணமாக்கி 2017 டிசம்பர் 26 முதல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

வருடத்துக்கு ஒன்று அல்லது இருமுறை விழாக்காலங்களின்போது பயன்படுத்தப்படும் பட்டாசுக்கு மட்டும் தடை விதிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுதலைத் தடுத்திட முடியும் என்பது ஏற்கத்தக்கதல்ல. பட்டாசு மூலம் ஏற்படும் சப்தம் மற்றும் புகை உள்ளிட்டவைகளை ஒழுங்குபடுத்திக் காண்காணிப்பதின் மூலம் மாசுபடுதலைக் கட்டுப்படுத்திட இயலும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017