மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சென்னை அணியின் ஆதிக்கம்!

சென்னை அணியின் ஆதிக்கம்!

சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதிய 33ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நான்காவது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர் முதல் நான்கு இடங்களை பெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும்.

நேற்று (டிசம்பர் 28) நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி இரு அணிகளும் மோதின. அதில் இரு அணிகளும் சரிசமமாக மோதின. போட்டியின் 41ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைச் சரியாக பயன்படுத்திக்கொண்ட சென்னை அணியின் வீரர் ஜேஜே லல்பெகுல்வா ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற வைத்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017