மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

ஷிகர் தவன் பங்கேற்பது சந்தேகம்!

ஷிகர் தவன் பங்கேற்பது சந்தேகம்!

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வருகிற ஜனவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், தொடக்க வீரருமான ஷிகர் தவன் இடம்பெறுவது சந்தேகமாகி உள்ளது.

இந்திய அணி வருகிற ஜனவரி மாதம் 5ஆம் தேதி முதல் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றடைந்த இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அணியில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்பது போட்டி தொடங்கும் முன்னர்தான் தெரியவரும்.

இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் தவன் காயம் காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என அணியின் உடற்பயிற்சியாளர் பேட்ரிக் தெரிவித்துள்ளார். தவன் முதல் போட்டியில் விளையாட முடியாமல் போனால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017