மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 டிச 2017

குளிர்கால ஒலிம்பிக் : ரஷ்யாவுக்குத் தடை!

குளிர்கால ஒலிம்பிக் : ரஷ்யாவுக்குத் தடை!

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று (டிசம்பர் 5) அறிவித்தது.

ரஷ்யா சொச்சியில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் பலர் ஊக்க மருந்து உட்கொண்டதாகவும், அதற்கு அந்நாட்டு அரசே உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்திய விசாரணையில் வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊக்க மருந்து உட்கொண்ட 14 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அவர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி, ஊக்கமருந்து உட்கொண்டது தொடர்பாக ஐந்து வீரர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்க் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அவர்களது பதக்கங்களும் பறிக்கப்பட்டன. அதேபோல், டிசம்பர் 1ஆம் தேதி, மூன்று வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு, பதக்கங்கள் பறிக்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பையோங்சாங் நகரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனப் பல நாடுகள் கோரிக்க விடுத்தன.

இந்நிலையில், இது தொடர்பான முடிவெடுக்க சுவிச்சர்லாந்தின் லாசன்னே நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. ரஷ்ய வீரர்கள் ஊக்கமருத்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், ரஷ்ய வீரர்கள் தனி நபர்களாக ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் சோதனைக்கு பின்னரே அவர்கள் விளையாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ரஷ்யாவின் கொடி, சீருடை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறிழைக்காத வீரர்களை தண்டிப்பது அநியாயமானது என ஒலிம்பிக் குழுவிடம், ரஷ்ய ஒலிம்பிக் குழுத் தலைவர் கூறியுள்ளார்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

புதன் 6 டிச 2017