மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

டிஜிட்டல் திண்ணை: காட்டிக் கொடுத்தாரா வைத்திலிங்கம்?

டிஜிட்டல் திண்ணை: காட்டிக் கொடுத்தாரா வைத்திலிங்கம்?

கோபத்தில் விவேக்

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “செம கடுப்பில் இருக்கிறது விவேக் குடும்பம். அவர்கள் கோபமும் ஆதங்கமும் தஞ்சாவூர் பக்கத்தை நோக்கித் திரும்பி இருக்கிறது. 187 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு சில ஆவணங்களை அள்ளிக்கொண்டு போனார்கள்.

சோதனைக்குப் பிறகு விவேக்கிற்கு நெருக்கமான சில அதிகாரிகள் அவரிடம், ‘இந்த ரெய்டுக்குக் காரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் ரெய்டு நடத்தச் சொல்லி ப்ரஷர் கொடுத்திருக்கிறார். எங்கே சொத்துக்கள் இருக்கிறது... யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற இந்த 187 பேரின் லிஸ்டையும் கொடுத்தது எடப்பாடிதான்...’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் விவேக்கோ, ‘ரெய்டுக்கு வேண்டுமானால் எடப்பாடி ப்ரஷர் கொடுத்திருக்கலாம். எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கு... யாரு வீட்டுல எல்லாம் ரெய்டு நடத்தலாம் என்பதை அவரால் சொல்லி இருக்க முடியாது. ஏன்னா அவருக்கு இந்த விவரங்கள் எதுவுமே தெரியாது. எடப்பாடிக்கு எங்க குடும்பத்தைத் தெரியும். சின்னம்மாவைத் தெரியும். அதைத்தாண்டி சிலரை மட்டுமே தெரியும். மற்றபடி எங்கள் ஆணி வேர் எங்கே என்ற விபரமெல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை. கார்டனில் இருந்தவன் என்ற முறையில் இது எனக்கு நல்லாவே தெரியும்..’ என்று சொல்லி இருக்கிறார்.

அப்படியானால், வருமான வரித் துறைக்கு இவ்வளவு துல்லியமாக லிஸ்ட் கொடுத்தது யார் என்பதுதான் விவேக்கைத் தொடர்ந்து குடைந்த கேள்வி. விவேக் அமைதியாக இருக்கவில்லை. டெல்லியில் உள்ள சிலரைத் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துவிட்டாராம் விவேக்.

‘உங்களைப் பற்றியும் உங்க குடும்பம் சார்ந்தவர்கள், நண்பர்கள் என எல்லா தகவல்களும் வைத்திலிங்கம் மூலமாகத்தான் வருமான வரித் துறைக்கு போயிருக்கிறது. டெல்லியில் அவர் தங்கியிருந்த சமயத்தில் நேரடியாகவே வாக்குமூலம் போல ஒரு பட்டியலைக் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த பட்டியலை வைத்துதான் ரெய்டுக்குத் திட்டமிட்டது வருமான வரித் துறை’ என்பதுதான் டெல்லி தகவல்.

‘அம்மாவும் சரி... சின்னம்மாவும் சரி... அவரை எவ்வளவு நம்பினாங்க என்று எனக்குத்தான் தெரியும். நம்ம ஊருக்காரரா இருக்காரே என்றுதான் சின்னம்மா அவருக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்தாங்க. எல்லாவற்றையும் அவரோடு பகிர்ந்துக்கிட்டாங்க. அவரு இப்படி செய்வாருன்னு நான் எதிர்பார்க்கலை. எல்லா அமைச்சர்களும் சின்னம்மாவுக்கு எதிரா பேசினபோதுகூட, வைத்திலிங்கம் அமைதியாதான் இருந்தார். விசுவாசத்துக்காகத்தான் அப்படி இருக்காருன்னு நான் நினைச்சேன். இப்படி பழி வாங்கத்தான் காத்திருந்தாருன்னு எங்களுக்கு புரியாமல் போச்சு. எடப்பாடியும், பன்னீரும் செஞ்சது நம்பிக்கை துரோகம்னா வைத்திலிங்கம் செஞ்சதை எந்த லிஸ்ட்ல சேர்க்கிறது. இதுக்கெல்லாம் அவரு அனுபவிப்பாரு...’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வேதனையோடு சொன்னாராம் விவேக்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது.

“ஜெயலலிதா இருந்தவரை போயஸ் கார்டன் வட்டாரத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று பூங்குன்றன். ஜெயலலிதாவின் உதவியாளர் எனக் கட்சி வட்டாரத்தில் அறியப்பட்டவர் பூங்குன்றன். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பூங்குன்றன் எங்கேயும் வெளியே வரவே இல்லை. சசிகலா பரோலில் வந்த சமயத்தில் மட்டும் அவரைப் பார்க்க ஒருமுறை தி.நகர் வீட்டுக்கு வந்து போனதாகச் சொன்னார்கள். அதன் பிறகு வருமான வரித் துறை சோதனைப் பட்டியலில் பூங்குன்றன் பெயரும் இருந்தது. பூங்குன்றன் வீட்டுக்கும் ரெய்டு போனது. ஆனால், பூங்குன்றன் வீட்டிலிருந்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பூங்குன்றன் கொடுத்த சில தகவல்களை வருமான வரித் துறை அப்படியே டெல்லிக்குச் சொன்னதாக சொல்கிறார்கள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017