மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

அறம்-2: நயன்தாரா ரெடியானால் போதும்!

அறம்-2: நயன்தாரா ரெடியானால் போதும்!

அறம் திரைப்படத்தின் கடைசி காட்சியில் ‘மதிவதனியாகிய நான்...’ என பின்னணிக் குரல் ஒலிக்க நடந்து வரும் நயன்தாராவைப் பார்த்தபோது அவரது தன்னம்பிக்கையிலும், தைரியத்திலும் பிரமித்துப்போன பலர் பார்க்கத் தவறிய ஒன்று ‘அறம்- ஆரம்பம்’ என்ற அறிவிப்பு. இயக்குநரின் அந்த நோக்கத்துக்குப் பின்னணி என்ன என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. நயன்தாரா நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றுள்ள அறம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் சமூகக் கருத்துக்கள் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் பிரச்சினை, அதற்குப் பின்னால் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல், தொழில்நுட்பப் பயன்பாட்டில் வளர்ச்சியடைந்துள்ளதாகப் பெருமைப்படும் இந்தியா, உள்கட்டமைப்பில் எந்த அளவுக்குத் தோல்வியைச் சந்தித்துள்ளது என அரசியல் விமர்சன கருத்துக்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

இப்படம் சினிமா ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோடு ரஜினி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் படக் குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் கோபி நயினார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள், “விரைவில் அறம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும். தற்போது அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திலும் சமூக அக்கறையுள்ள அழுத்தமான பதிவுகள் இடம்பெறும்” என்று தெரிவித்தனர்.

ஆனால், அறம் படத்தின் வெற்றியை இரு தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் கொண்டாடிய நயன்தாரா, கோபி நயினார் இருவரும் அறம் 2 குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோபி நயினார் ஒரு கதைக் களஞ்சியம். மக்களோடு மக்களாகக் களச் செயல்பாடுகளை அதிகம் கொண்டவர் என்பதால் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னையைச் சொன்னாலும் அதற்கு ஒரு சம்பவத்தையும், அதைச் சுற்றிப் பேச வேண்டியவற்றையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அறம் திரைப்படத்தின் அடுத்த கட்டக் கதையையும் அவர் கிட்டத்தட்ட ரெடி செய்துவிட்டார். நயன்தாரா ஓகே சொன்னால் உடனே களமிறங்கிவிடுவார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017