மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது?

திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது?

ஊழல் வரலாற்றைச் சுட்டிக்காட்டினால் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (நவ.15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மை சுடும்... ஊழல் மேலும் சுடும். அதனால்தான் திமுகவின் ஊழல்கள் குறித்த சர்க்காரியா ஆணையக் குற்றச்சாட்டுகளை நினைவுபடுத்தியதற்காக திமுகவின் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி துள்ளிக் குதித்திருக்கிறார். திமுக செய்த ஊழல், துரோகம் குறித்த உண்மைகளைக் கூறினால் அக்கட்சித் தலைமைக்கு கோபம் வருவது வியப்பளிக்கிறது.

நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்ததில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்த அளவுக்குப் பங்கு உண்டோ, அதைவிட அதிக பங்குப் திமுகவுக்கு உண்டு. 2009ஆம் ஆண்டில் திமுக கேட்ட அமைச்சகங்களை ஒதுக்க மறுத்ததற்காக மத்திய அரசில் சேர மாட்டோம் என்று மிரட்டல் விடுத்து, டெல்லியிலிருந்து அவசர அவசரமாகச் சென்னை திரும்பிய திமுக தலைமை, நீட் விவகாரத்தில் அதே ஆயுதத்தைப் பயன்படுத்த மறுத்தது ஏன் என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு பொன்முடி பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து நீட்டுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது, வழக்கு தொடர்ந்தது எனப் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருப்பதால் பயனில்லை.

தமிழகத்தின் நலன்களைக் காப்பதில் அன்புமணி கடைபிடித்த உறுதிப்பாட்டில் பத்தில் ஒரு பங்கை திமுக தலைமையும், அதன் மத்திய அமைச்சர்களும் கடைபிடித்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தை நெருங்கியிருக்காது.

திமுகவின் ஊழல்கள் குறித்த சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை உள்ளீடற்றது என்று பொன்முடி கூறியிருக்கிறார். உள்ளீடற்ற அந்தக் குற்றச்சாட்டுக்காகத்தான் திமுக தலைமை டெல்லியிடம் சரண் அடைந்து கிடந்ததா என்பதை அப்போது அரசியலுக்கு வராத பொன்முடி கட்சித் தலைமையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவின் ஊழலை மறுக்கும் பொன்முடி மீதே வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்ததாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து பொன்முடி விடுதலையான ரகசியம் அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டு ஊழல் வரலாற்றை திமுகவை தவிர்த்து விட்டு எழுத முடியாது. ஊழல் என்றாலும் திமுக என்றாலும் ஒரே பொருள்தான். நீட் தேர்வு, ஊழல் குறித்த அறிக்கையில் அந்தச் சொற்களை விட வன்னியர் என்ற சொல்லைத் தான் பொன்முடி அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ஊழல், நீட் தேர்வு ஆகியவற்றுக்கும் வன்னியருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை. பாமகவை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு பொன்முடி தந்து சாதி வெறியை வெளிப்படுத்தி உள்ளார்” என மணி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக, சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், திமுக வகுத்துகொடுத்த பாதையில்தான் அதிமுகவினர் ஊழல் செய்கின்றனர் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017