மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ரசகுல்லா யாருக்குச் சொந்தம்!

ரசகுல்லா யாருக்குச் சொந்தம்!

இனிப்புப் பலகாரங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். அப்படி விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்றான ரசகுல்லா யாருக்குச் சொந்தம் என்பதில் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா இடையே போட்டி நிலவி வந்தது. இதில் ரசகுல்லா இனிப்பின் மீதான உரிமைப் போராட்டத்தில், மேற்கு வங்க மாநிலம் வெற்றி பெற்று, ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்தக் குறியீடு, அந்தப் பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ பறைசாற்றும் சான்றாக விளங்கும். இந்தியப் பொருட்களில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த 57 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 2003ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

இந்த ரசகுல்லா 1868ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் பிரபல இனிப்பு தயாரிப்பாளரான, நவீன் சந்திர தாஸ் என்பவர் இதனை அறிமுகப்படுத்தியுள்ளார். பாலில் தயாரிக்கப்படும், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்ற மென்மையான இந்த ரசகுல்லாவை நவீனின் வாரிசுகள் இன்றும் மேற்கு வங்கத்தில் உள்ள நகரில் விற்பனை செய்துவருகின்றனர். அதனால் எந்த நிலையிலும், ரசகுல்லா மீதான உரிமையை ஒடிசாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என, மேற்கு வங்காளம் கூறியது.

ஒடிசாவின் பூரி நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் இறைவனுக்கு தினமும் ரசகுல்லா படைக்கப்படுகிறது. அதனால் ரசகுல்லா தங்களது மாநிலத்திற்குச் சொந்தமானது என ஒடிசா நீண்ட நாட்களாகக் கூறிவந்தது. எனவே ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கூறி மேற்கு வங்காளத்துடன் போட்டி போட்டது.

இந்த உரிமைப் போராட்டம் நீடித்துவந்த நிலையில், ரசகுல்லா மீதான உரிமையை, ஒடிசாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என, மேற்கு வங்க அமைச்சர், அப்துர் ரஜாச் மோல்லா கூறியிருந்தார். மேலும், ரசகுல்லாவை உலக அளவில், மாநில இனிப்பாக பிரபலப்படுத்த வேண்டும் என, முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017