மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சித்ரா டீசர்: நிர்வாணம் தீண்டாமையா?

சித்ரா டீசர்: நிர்வாணம் தீண்டாமையா?

“மகளே, உடை என்பது உடலை மறைக்கத்தானே தவிர ஆன்மாவை மறைப்பதற்காக இல்லை. நான் எனது கலையின் மூலம் ஆன்மாவைத் தேட முயற்சிக்கிறேன். புரிகிறதா” என்று நஸ்ருதீன் ஷா பேசும் வசனம் மட்டுமே Nude அல்லது Chitraa எனப்படும் மராத்திய திரைப்படத்தின் கதையைச் சொல்கிறதே தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் அருவிபோல ஓடுகின்றன அதன் டீசரில்.

ஓவியப் பள்ளியில் கலை பயிலும் மாணவர்களுக்குக் கற்பித்திட நிர்வாணமாக நிற்கும் ஒரு பெண்ணின் கதையை சித்ரா திரைப்படம் பேசுவதாக டீசர் சொல்கிறது. மும்பையில் உயிர் வாழ்தலுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் பெண் ஒருவர், இந்த ஓவியப் பள்ளியில் வந்து சேர்கிறார். அங்கு அவரது வாழ்வு எப்படி இருக்கிறது, அவர் பெறும் படிப்பினைகள் என்னவென்பது படத்தின் கதை. ஓவியப் பள்ளிகளில் நிர்வாணமாக நின்று மாணவர்களைப் பயிற்றுவிக்கும் மாடல்களுக்கு இப்படத்தைச் சமர்ப்பணம் செய்திருப்பதாக டீசரில் கூறப்பட்டிருப்பதால், மேற்கூறிய தகவல்கள் உண்மையாகின்றன.

டீசர் சொன்னது போக, இதில் பேசப்பட்டிருக்கும் அல்லது விவாதிக்கப்பட்டிருக்கும் தகவல்களின் காத்திரத் தன்மையை பின்வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிந்துகொள்ளலாம். 48ஆவது IFFI திரைப்பட விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களினால் தலைப்புச் செய்தியில் இடம்பெறாமல், அதில் கலந்துகொண்ட படங்களுக்காகவே அதிகம் சர்ச்சைக்குள்ளானது.

IFFI விழாவின் நடுவர்கள் பல திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, அவற்றில் எந்தெந்தப் படங்களை எப்போது திரையிடலாம் எனத் திட்டம் வகுத்துக் கொடுத்தனர். ஆனால், விழா தொடங்கியபோது அவர்கள் முதலாவதாகத் திரையிட வேண்டுமெனத் திட்டமிட்டுக் கொடுத்திருந்த Nude (Chitraa) திரைப்படம் திரையிடப்படவில்லை. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது, இந்தியாவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம். IFFI விழாவில் திரையிடப்படவிருந்த Nude (Chitraa) மற்றும் S Durga (செக்ஸி துர்கா என உருவாக்கப்பட்டு டைட்டில் மாற்றப்பட்டது) ஆகிய படங்களை நடுவர்கள் கொடுத்த லிஸ்டிலிருந்து நீக்கியிருந்தனர். இதை எதிர்த்து கேள்வியெழுப்பிய விழாவின் நடுவர்களில் ஒருவரான சுஜய் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்து கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இப்படி இந்திய அரசால் தவிர்க்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் டீசர் இப்போது வெளியாகி, அதிலும் இந்தியாவின் மிக முக்கியமான, பெண்களின் சுதந்திரம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளை விளக்கும் ஒரு படமாகவும் அது இருக்கும்போது இது கண்டிப்பாக மக்கள் பார்க்க வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்போதைக்கு டீசர் மட்டும் வாசர்கர்களின் பார்வைக்குக் கொடுக்கப்படுகிறது.

Nude சித்ரா - டீசர்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017