மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஆளுநர் அலப்பறைகள் : அப்டேட்குமாரு

ஆளுநர் அலப்பறைகள் : அப்டேட்குமாரு

பதவி பிரமாணம் செஞ்சுவைக்க வருவாருன்னு பார்த்தா பதவியேற்க வந்தவர் மாதிரியில ஆக்டிங்க கொடுக்குறாரு. ஆளுநரை தான்ங்க சொல்றேன். ஓ இதுக்கு தான் தலை, கொஞ்ச நாளைக்கு முன்னால தமிழ் படிக்கிறதா சொன்னாரா? சட்டமன்றத்தை கூட்ட சொன்னா குப்பையை கூட்டிகிட்டு இருக்காறேன்னு நம்ம படைகள் குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல்வர்ன்னு ஒன்னுக்கு ரெண்டு பேர் இருந்து என்ன பிரயோஜனம். அவங்க வேலையை இவர் பண்ணிட்டு இருக்காரு. யார் வீட்டுல யார் நுழையுறதுன்னு நெட்டிசன்ஸ்லாம் கொந்தளிச்சுக்கிட்டு இருக்காங்க. இவங்க என்னடான்னா யாருக்கு வந்த விருந்தோன்னு கம்முன்னு இருக்காங்க. எப்ப பார்த்தாலும் குனிஞ்ச மானைக்கு கும்பிட்டே பழகிட்டாங்களா, முதல்வர் பதவின்னா என்னென்ன செய்யனும்னே தெரியல போல. ப்ரோகிராம் பண்ணுன ரோபோ மாதிரி வந்துட்டு போறாங்க. இதுல ஒரு கூத்தை பார்த்தீங்களா அமைச்சர் ஜெயக்குமார் போய் ஒரு பள்ளிகூடத்துல அறிவியல் பாடம் நடத்திட்டு வந்துருக்காரு. குறியீடுகள் பத்தி மாணவர்கள்ட்ட கேள்விகள் கேட்டாராம். இங்க நடக்குறதை எல்லாம் பார்த்தா எதோ அழிவின் குறியீடு மாதிரியே தெரியுது.

@கருத்து கணேசன்

உண்மையை பேசுவதில் உள்ள

செளகர்யம் என்னவென்றால்

என்ன பேசினோம் என்பதை

ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை...!

@Kozhiyaar

சமரசம் மருவி தான் சம்சாரம் ஆகியிருக்க வேண்டும்!!!

@CreativeTwitz

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது; அக்கட்சியினரே அழித்து விடுவார்கள் - மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

உங்க கட்சிய அழிக்க எச்.ராஜா ஒருத்தரு போதும் போங்கய்யா அங்கிட்டு

@nithya_shre

அதிமுக என்ற எஃகு கோட்டையின் ஒரு செங்கலை கூட யாராலும் உருவ முடியாது #_ஓபிஎஸ்

இந்த உலகத்திலேயே எஃகு கோட்டையை செங்கலால கட்டிய மொதல் கோஷ்டி அதிமுக கோஷ்டிதான்

@pandi_tamilan

GST வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு - அருண் ஜேட்லி

பரமா தோல்வி பயத்த காமிச்சிட்டாய்ங்க பரமா

@Boopathy Murugesh

MGR இறந்து 30 ஆண்டுகளுக்கு பிறகும் மக்களுக்கு அவர் மீது ஒரு மரியாதை உண்டு..

இந்த எடப்பாடி அரசு இன்னும் 3 ஆண்டுகள் தொடர்ந்தால் அந்த மரியாதை உடைந்து விழும்..

MGR நூற்றாண்டு விழா பரிதாபங்கள்..

@Bloo_whalE

ஜிஎஸ்டி வரிவிதிப்பாலேயே குஜராத்தில் 150 தொகுதிகளில் பாஜக வெல்லும் #அமித்_ஷா

எந்த பட்டனை அழுத்தினாலும் பிஜேபிக்குதான் ஓட்டுவிழும்னு சொல்றாரு மக்களே.

@mujib989898

ஒரு ஊரு நல்லா இருக்க ஒரு அரசியல்வாதி வீட்டில் ரெய்டு நடத்தினால் போதும்

இந்த நாடு நல்லா இருக்க எல்லா அரசியல்வாதி வீட்டிலும் ரெய்டு நடத்தினால் போதும்

உலக வங்கியில் கடனே கேட்க தேவை இருக்காது..

@இயற்கையின் காதலன்

முதலில் இந்தியன்

அப்புறம் நான் தமிழன் -

முதல்ல தாய்க்கு நல்ல மகனா இரு

அப்புறம் மாமியார்க்கு நல்ல மருமகனா இருக்கலாம்.

@Tamil_Zhinii

GST வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு - அருண் ஜேட்லி

GST ல Depreciation பண்ணா குஜராத் தேர்தல்ல Net profit வரும்னு பிஜேபி தப்பு கணக்கு போடுறாங்க

@navaneetha172

ஒரு பொண்ணு மொபைலை பார்த்துக்கிட்டே நடந்துவந்து என்மேல மோதிவிட்டு என்னிடமே கேட்டது

'என்ன கனவு கண்டுக்கிட்டு வரியா'ன்னு. இதுவரை இல்ல இனிமே காணுவேன்னு சொல்லிட்டேன்

@MJ_twets

நடிகர் விஷால் வீட்டில்

நகை திருட்டு.//செய்தி;

ஒரு வேளை அவரு கல்யாணத்துக்கு வாங்கி வச்சிருந்துருப்பாரோ ச்சே ச்சே..,

@HAJAMYDEENNKS

வெளிநாடுகளில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டினால் வித்தியாசமா பார்ப்பாங்க..நம்ம நாட்டுல ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் வித்தியாசமா பார்க்குறாங்க...!

@senthilcp

அதிமுக அரசு மாநில உரிமைகளை என்றைக்குமே விட்டுக்கொடுக்காது - செல்லூர் ராஜூ

ஓடி ஓடி டெல்லி போய் பம்மும்போதே தெரியுது

@HAJAMYDEENNKS

நேரத்தை எல்லாம் சாகடித்துவிட்டு இறுதியில் தானும் மடிகிறது

"மொபைல் பேட்டரி"...!

@Boopathy Murugesh

தமிழ்காரன் ஹோட்டல்ல எக்ஸ்ட்ரா சோறு கேட்டா 20ரூ சொல்றான்..

ஆந்திராக்காரன் ஹோட்டல்ல வயிறார அன்லிமிட்டட் சாப்பாடு போடுறான்..

இவனுங்க அவன வந்தேறிங்கிறானுங்க

@Haris Mohamed

GST-ன்னா என்னாணே?

அடேய் மன்டையா GUJARAT SAVING TAX தான்டா GST.

@Prabakar Kappikulam

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை.

அரசு நிர்வாகத்தை கவனிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையிலான அதிகாரிகள்.

தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மீது அவதூறு பரப்பும் எதிர்கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம்..!

- இவண் -

மக்களாட்சியை மத்தியில் அடகு வைத்தோர் சங்கம்

@வாசுகி பாஸ்கர்

வீட்ல அடுப்படியில் சமையல் நடந்து கொண்டே இருக்கும், ஒரு ஓரமா குழந்தைங்க சொப்பு வச்சி அதுங்க பாட்டுக்கு சமைக்கிற மாதிரி விளையாடிட்டு இருக்கும். அந்த மாதிரி இருக்கு தமிழ்நாட்டு அரசாங்கத்து நிலைமை. எவன் சமைக்குறான், எவன் சொப்பு வச்சியிருக்கான்னே தெரியலை

@கருப்பு கருணா

ஆளுநர் வரம்பு மீறியிருந்தால் அதை தமிழக அரசுதான்

சொல்ல வேண்டும்: வானதி ஸ்ரீனிவாசன்

சரிம்மா... அதை ஆளுநர் சொல்லட்டும்மா... நீங்க யாரு சொல்றதுக்கு...தள்ளி நில்லுங்கம்மா..

-லாக் ஆஃப்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017