மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

நளினியை விடுவிக்க வாய்ப்பில்லை!

நளினியை விடுவிக்க வாய்ப்பில்லை!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்றில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

1991ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 9 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கடந்த 26 வருடங்களாகச் சிறையில் இருக்கும் நளினி 1994ஆம் ஆண்டு தமிழக அரசின் சட்ட விதிகளின்படி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக உள்துறை இணை செயலாளர் எஸ்.ஆர்.தேவாசிர்வாதம் நளினியை விடுவிக்க முடியாது என பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017