மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

தமிழகத்தில் மழை குறையும்!

தமிழகத்தில் மழை குறையும்!

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் தமிழகத்தில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், ''மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அங்கு நிலவுகிறது. தமிழகத்தில் வெகு தொலைவில் அது நிலவுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

அது 240 மைல் தொலைவில் மசூலிப்பட்டினம் அருகே உள்ளது. வடதிசை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு மழை குறையும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் தஞ்சையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரு தினங்களில் அதாவது 15 மற்றும் 16 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017