மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலமும் ஒன்று. 1455 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்தப் புலிகள் காப்பகம், 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புலிகள் எண்ணிக்கை வெறும் 8ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து புலிகளைப் பாதுகாக்கக் குற்றத்தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பு காரணமாக புலிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை 55ஆக உயர்த்தப்பட்டது.

தலமலை, பவானிசாகர், கேர்மாளம் ஆகிய பகுதியில் மனித நடமாட்டம் இல்லாத அதிக நீர்நிலைகள் கொண்ட பகுதி என்பதால் புலிகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.

அதிக பரப்பளவு கொண்ட இந்தப் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 150 புலிகள் வாழ்வதற்கான சூழல், காடு ஆகியவை உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

புலிகள் எண்ணிக்கையைக் கணக்கிட புலிகள் காப்பகத்தை இரு கோட்டங்களாகப் பிரித்து அதில் 356 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து 60 நாள்கள் மேற்கொண்ட ஆய்வில் புலிகள் மொத்தமாக 55 உள்ளதாகவும் அதில் ஆண் புலி 21, பெண் புலி 32, அடையாளம் காணப்படாத புலி 2 மற்றும் புலிக்குட்டிகள் 11 நடமாடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தப் புலிகள் காப்பகத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை 111, யானைகள் 752 கழுதைப் புலிகள் 42 உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017