மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஆக்கிரமிப்பு புகார்: பதவியை ராஜிநாமா செய்த அமைச்சர்!

ஆக்கிரமிப்பு புகார்: பதவியை ராஜிநாமா செய்த அமைச்சர்!

நில அபகரிப்புப் புகார் காரணமாகக் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கேரளாவில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தாமஸ் சாண்டி. மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். ஆலப்புழாவில் உள்ள தனக்குச் சொந்தமான ரிசார்ட்டிற்காக அரசு நிலத்தை ஆக்கிரமித்துப் பாதை அமைத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அனுபமா, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாமஸ் சாண்டி மனு தாக்கல் செய்தார். எனினும், அங்கம் வகிக்கும் அரசுக்கு எதிராக அமைச்சர் புகார் மனு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆட்சியர் புகார் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டது.

அரசுக்கு எதிராகப் புகார் மனு அளித்தவர் எப்படி அமைச்சராகத் தொடரலாம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தனது அமைச்சர் பதவியை தாமஸ் சாண்டி இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017