மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

விஷால் படப்பிடிப்பில் ரெய்டு!

விஷால் படப்பிடிப்பில் ரெய்டு!

இரண்டாயிரம் ரூபாய் பணக்கட்டுகளுடன் பிடிபட்ட விஷாலை, அதிகாரிகள் விசாரணை செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கடந்த மாதம் விஷால் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியதோடு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த டிடிஎஸ் பணமான ரூ.50 லட்சத்தை முறையாக செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்து விஷால் நேரடி விலாக்கமளிக்க நோட்டிஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விஷாலுக்குப் பதிலாக அவருடைய ஆடிட்டர் விளக்கமளித்தார். மேலும் அந்த தொகையை இரண்டு மூன்று தவணையாக கட்டிவிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த ரெய்டுக்கு காரணம் விஷால் ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான விவசாயிகள் பிரச்சினை, கந்துவட்டி, குழந்தைகள் மரணம் என்று பல சமூக பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் கூறுவது தான் என்று பேசப்பட்டது.

நேற்று முன்தினம் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி, “விரைவில் நடிகர் விஷால் அரசியலுக்கு வருவர்” என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில் நடிகர் விஷால் கட்டுக் கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுடன் பிடிபட்டுள்ள வீடியோ காட்சி வலைதளங்களில் பரவிவந்தது. இதைப்பற்றி விசாரித்தபோது, இரும்புத்திரை படத்தின் புரமோஷனுக்காக வேண்டுமென்றே படக்குழு செய்த காரியம் இதுவென்று தெரியவந்தது.

விஷால், சமந்தா நடிப்பில் இரும்புத்திரை படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்தது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் அந்த ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அந்த வீடியோ காட்சி தெளிவுபடுத்தியுள்ளது. 51 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பதிவின் முதல் 30 வினாடிகள் விஷால் பெரும் தொகையுடன் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டது போன்று நாம் அனைவரையும் நம்ப வைத்தாலும் அதன் பின்னர் அந்த பதிவில் நடிகர் அர்ஜுன் குறுக்கிடும்போது தான் அது ஒரு பிராங்க் வீடியோ என்று உணரமுடிகிறது. இந்த வீடியோ குறித்து விஷால் தரப்பில்,“இந்த வீடியோ இரும்புத்திரை படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டது. மற்றபடி எதுவுமில்லை” என்று கூறினார்.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இரும்புத்திரை படத்தை அடுத்த ஆண்டு (2018) பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் விரைவில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இனி உண்மையிலேயே விஷால் ரெய்டில் சிக்கினாலும், பிராங்க் வீடியோ என்று மக்கள் கடந்துவிடுவார்கள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017