மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பிரதியுமான் வழக்கு: தந்தையின் பரபரப்பு தகவல்!

பிரதியுமான் வழக்கு: தந்தையின் பரபரப்பு தகவல்!

பிரதியுமான் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்த வேண்டாம் என்று ஹரியானா அமைச்சர் ஒருவர் கேட்டுக்கொண்டதாகக் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 8ஆம் தேதி குருகிராம் ரியான் சர்வதேசப் பள்ளியில் கொலை செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவரின் தந்தை வருண் தாகூர் ஒரு பரபரப்பான தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார், சிபிஐ விசாரணையைத் தொடர வேண்டாம் என்றும். சிபிஐ விசாரணைக்கு அதிக கால அவகாசம் தேவைப்படும் என்றும் மாநில போலீஸ் விசாரணை விரைவில் முடிக்கும் எனவும் அமைச்சர் ராவ் நார்பிர் சிங் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர், “சம்பவம் நடந்த அன்றே வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசால் உத்தரவிட முடியாது. முதலில் போலீஸ் விசாரணை நடத்தட்டும், ஒரு வார காலம் ஆன பிறகு விசாரணையில் திருப்தியில்லை என்றால் சிபிஐக்குப் பரிந்துரைக்கலாம் என்று கூறினேன்” என விளக்கமளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017