மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

மத்திய அமைச்சர்களைச் சந்தித்த தம்பிதுரை

மத்திய அமைச்சர்களைச் சந்தித்த தம்பிதுரை

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் தமிழக மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படை நவம்பர் 14 அன்று ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வழக்கமாக இலங்கை இராணுவத்தினால் தாக்குதலுக்கு உள்ளாகிவந்த தமிழக மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையே தற்போது தாக்கியுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொந்த நாட்டு மீனவர்களையே சுட்டுள்ளதால் தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிராகக் குரல்கள் ஒலித்துள்ளன. இந்தச் சூழலில் இதுகுறித்துப் பேசவே தம்பிதுரை நிர்மலா சீதாராமனைச் சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017