மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

முதல் பெண் வழக்கறிஞரைக் கவுரவித்த கூகுள்!

முதல் பெண் வழக்கறிஞரைக் கவுரவித்த கூகுள்!

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னீலியா சொரப்ஜியின் 151ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுலில் அவரது புகைப்படத்தை வைத்துக் கவுரவித்துள்ளது.

கார்னீலியா சொரப்ஜி, 15 நவம்பர் 1866 ஆண்டு நாசிக்கில் பிறந்தவர். ரெவார்ட் சொரப்ஜி கர்செட்ஜி மற்றும் பிரான்சினா ஃபோர்டு தம்பதியினருக்குப் பிறந்த 9 குழந்தைகள் கார்னீலியாவும் ஒருவர். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகப் போராட ஊக்குவித்து வளர்த்தனர்.

பாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்மணி ஆகிய பெருமைகளுக்கு உரியவர். இந்தியாவிலும் பிரிட்டனிலும் சட்ட பயிற்சி பெற்றார். ஆனால் இவரது முயற்சிக்கு முதலில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 1899ஆம் ஆண்டு ஆளுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், 1923 வரை அவர் சட்டத் துறையில் பணியில் அமர்த்தப்படவில்லை.1904ஆம் ஆண்டில், வங்காள நீதிமன்றத்தில் பெண் உதவியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் பிகார், ஒரிசா (தற்போது ஒடிசா), அசாம் மாநில நீதிமன்றங்களில் பணியாற்றினார். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நிகழும் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார்.

1923ஆம் ஆண்டு நீதிமன்றங்களில் பெண்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றலாம் என்று அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர் 1924ஆம் ஆண்டு முதல் மும்பை, கொல்கத்தா ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இதையடுத்து இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார். பெண்கள், விதவைகளுக்கு ஆதரவாக வாதாடினார். எண்ணற்ற புத்தகங்களையும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017