மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

இந்தியா vs இலங்கை போட்டியில் நெஹ்ரா

இந்தியா vs இலங்கை போட்டியில் நெஹ்ரா

கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வுபெற்று சில வாரங்களே ஆகின்றன. அதற்குள், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் தனது எண்ட்ரியை அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்திய பவுலராக ஓய்வு பெற்ற நெஹ்ரா, இந்திய அணி அடுத்ததாக விளையாடும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக அறிமுகமாகிறார். இந்தத் தகவலை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்டில் அறிவித்திருக்கிறது. இத்தனை சீக்கிரத்தில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்விலிருந்தே இதற்கான அடிப்படைகள் ஏற்கனவே பதிக்கப்பட்டவை என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நெஹ்ரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தபோதே அவரை ‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி சூழ்ந்து நின்றது. அப்போது “செய்வதற்கா வேலையில்லை எத்தனையோ வேலை இருக்கிறது” என்று கூறியிருந்தார். இந்தியா- இலங்கைக்கிடையேயான போட்டியில் நெஹ்ராவுடன் இணைந்து கமெண்ட்ரி செய்யவிருக்கும் வீரேந்திர சேவாக் கேட்டபோது “நிறைய பண்ணலாம். கோச்சிங், கமெண்ட்ரி இப்படி இந்திய அணிக்கு நான் செய்யவேண்டியது மீதி இருக்கிறது” என்று கூறினார். இப்படி நெஹ்ரா தொடர்ந்து கமெண்ட்ரி செய்யும் விருப்பத்தைத் தெரிவித்துவந்ததால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அவரது ஒப்பந்தத்தை எளிதாகக் கைப்பற்றிவிட்டது.

சேவாக்குடன் இணைந்து இந்தி மொழியில் நெஹ்ரா கமெண்ட்ரி செய்கிறார். போட்டிகள் முடிந்ததும் மைக் கிடைக்கும் சொற்ப நிமிடங்களிலேயே நெஹ்ரா மிகவும் நகைச்சுவையாகப் பேசக்கூடியவர் என்பதால், அதிகம் பேச வாய்ப்புக் கிடைக்கும் வர்ணனையில் என்னவெல்லாம் பேசப்போகிறார் எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017