மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

787 கோடியில் 93 லட்சம் செலவு!?

787 கோடியில் 93 லட்சம் செலவு!?

கடந்த இரண்டு ஆண்டுகளில் டெல்லியில் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைச் சரிசெய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 0.12 சதவிகிதத்தை மட்டுமே அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு செலவிட்டிருப்பதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, டெல்லியில் காற்றின் தரம் வெகுவாகக் குறைந்துவருகிறது. சமீப நாட்களாக சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், டெல்லி அரசு சுற்றுப்புறச்சூழல் சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து எவ்வளவு தொகையை இதுநாள்வரை செலவு செய்துள்ளது என்றறிய தகவலறியும் உரிமைச் சட்டத்தை நாடினார் சமூக ஆர்வலர் சஞ்சீவ் ஜெயின். இதற்கான பதில் தற்போது தெரியவந்திருக்கிறது.

2015ஆம் ஆண்டு டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்றது. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 93 லட்சம் ரூபாயைச் செலவு செய்திருக்கிறது கேஜ்ரிவால் அமைச்சரவை. “ஆனால் இதற்காக 787கோடியே 12 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டிருக்கிறது. அதில் மிகக் குறைந்த தொகையே செலவு செய்யப்பட்டிருக்கிறது” என்றிருக்கிறார் சஞ்சீவ் ஜெயின்.

சுவாசிப்பதே பெரும்பாடு என்று டெல்லிவாசிகள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தகவல் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. விரைவில், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக காங்கிரசும் பாஜகவும் போராட்டம் நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017