மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சீனாவின் புது உத்தரவு: இயேசுவின் இடத்தில் அதிபர்!

சீனாவின் புது உத்தரவு: இயேசுவின் இடத்தில் அதிபர்!

வீட்டில் மாட்டிவைக்கப்பட்டுள்ள இயேசுவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதிபர் ஜின்பிங் புகைப்படத்தை மாட்டுங்கள் என அதிகாரிகள் கிராம மக்களை வலியுறுத்திவருவதாக ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

''சீனாவில் யூகான் கவுன்டி என்ற பகுதியில், அந்த நாட்டிலேயே மிகப் பெரிய ஏரியான போயங் அமைந்துள்ளது. கிறிஸ்தவ மக்கள் நிறைந்த பகுதியான இங்கு, உள்ளுர் அதிகாரிகள், இயேசு உங்களை வறுமையிலிருந்து விடுவிக்க மாட்டார். உங்கள் நோயைக் குணப்படுத்த மாட்டார். எனவே இயேசு புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதிபர் ஜின் பிங்கின் அழகிய புகைப்படத்தை வீட்டில் மாட்டுங்கள் என வலியுறுத்திவருகின்றனர்'' என சௌத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

''அதிகாரிகளின் உத்தரவை ஏற்று, 624 வீடுகளிலிருந்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த புகைப்படங்களை மக்கள் அகற்றியுள்ளனர். 453 வீடுகளில் ஜின் பிங்கின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன'' என்றும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் பெரும்பாலான வீடுகளில் அந்த நாட்டின் தந்தை மாசேதுங் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். தற்போது, சீன அதிபராக ஜின் பிங் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் 2022ஆம் ஆண்டு வரை தொடருவேன், 2020ஆம் ஆண்டுக்குள் சீனாவிலிருந்து வறுமையை விரட்டுவேன் என ஜின் பிங் சபதமிட்டுப் பணியாற்றிவருகிறார்.

சீனாவில் இருக்கும் ஒரு கோடி மக்களில் 11 சதவீதத்தினர் நாட்டின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 10 சதவீதம் கிறிஸ்தவர் என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் கூறியுள்ளது. மதச்சார்பற்ற நாடாக விளங்கும் சீனாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது உலக நாடுகளிடையே தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017