மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஜிம்பாப்வேவில் புரட்சி: ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்!

ஜிம்பாப்வேவில் புரட்சி: ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்!

ஜிம்பாப்வேவில் புரட்சியில் ஈடுபட்ட ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடந்த 1980ஆம் ஆண்டு முதல் ராபர்ட் முகபே அதிபராக இருந்துவருகிறார். இந்நிலையில், அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் கூறித் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை சமீபத்தில் முகபே பணி நீக்கம் செய்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று (நவ.15 ) அதிகாலை தலைநகர் ஹர்ரேவை ராணுவம் சுற்றி வளைத்தது. அரசு ஊடகத் தலைமையகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ராணுவம் அதிபர் ராபர்ட் முகபேவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது. அவரது மனைவி கிரேஸ் முகபே நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாகத் தகவல் வெளியான நிலையில் இதை ராணுவம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக ராணுவ மேஜர் ஜெனரல் மோயோ, அரசு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், “அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உள்ளனர். இது ஆட்சி கவிழ்ப்பு கிடையாது. அதிபரைச் சுற்றியுள்ள குற்றவாளிகளை மட்டுமே ராணுவம் குறிவைத்துள்ளது. நாட்டில் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களை நீதியின் முன் நிறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களின் இலக்கை அடைந்த பின். பழைய நிலைக்கு நாடு திரும்பும். எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017