மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

5 லட்சம் டன் பருப்புகள் விநியோகம்!

5 லட்சம் டன் பருப்புகள் விநியோகம்!

மத்திய அரசிடம் தற்போது கையிருப்பில் உள்ள 18 லட்சம் டன் அளவிலான பருப்பு வகைகளில், 5 லட்சம் டன்னை வரும் மார்ச் மாதத்திற்குள் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இந்த நிதியாண்டிற்குள் சேமிப்புக் கிடங்குகளில் கையிருப்பில் உள்ள பருப்புகளில் 3.5 லட்சம் டன் முதல் 5 லட்சம் டன் வரை மக்களின் நலத் திட்ட பணிகளுக்குப் பயன்படுத்த பொருளாதார விவகாரங்கள் துறையின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒவ்வொரு மாநிலங்களின் அமைச்சகங்களின் தேவைகளை அறிந்து கொண்டு அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் நியாய விலைக் கடைகளுக்குப் பருப்புகள் மானிய விலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் மூலம் அங்கன்வாடிகளுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் டன் பருப்புகள் தேவைப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டிற்குள் மேலும் 8 லட்சம் டன் பருப்புகள் உணவுக் கிடங்குகளிலிருந்து வெளியேற்றப்பட்டு சுமைகள் குறையும்" என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017