மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

குச்சுபுடி கலைஞர் ஷைலஜாவுக்குக் கிடைக்கும் கௌரவம்!

குச்சுபுடி கலைஞர் ஷைலஜாவுக்குக் கிடைக்கும் கௌரவம்!

பரத நாட்டியம் மற்றும் குச்சுபுடி கலைஞர் ஷைலஜாவுக்கு பாரதீய வித்யா பவன் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

பரத நாட்டியம் மற்றும் குச்சுபுடி நடனக் கலைக்காக கடந்த 40 ஆண்டுகளாக ஷைலஜா ஆற்றிவரும் சேவைக்காக இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. சென்னையில் வரும் சனிக்கிழமை (நவம்பர் 19) நடைபெறும் விழாவில் ஷைலஜாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விருதை வழங்குகிறார்.

சென்னையைச் சேர்ந்த ஷைலஜா தனது ஐந்து வயதில் வழுவூர் பாணியிலான நடனக் கலைப் பயிற்சியைத் தொடங்கியவர். பரத நாட்டியத்தை கலைமாமணி கே.ஜே.சரசாவிடமும், குச்சுபுடியை பத்மபூஷன் வேம்பட்டி சின்ன சத்தியத்திடமும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். பரதநாட்டியம், குச்சுபுடி நடனங்களில் 40 ஆண்டுகளாக வெற்றிகரமான கலைஞராகவும், ஆசிரியராகவும், நடன இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார்.

கலைமாமணி விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்ற ஷைலஜா இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர். வெளிநாட்டு மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குச்சுபுடி நடனக் கலையைப் பயிற்றுவித்தவர்.

பாரதீய வித்யா பவன் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் முதல் குச்சுபுடி நடனக் கலைஞர் ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017