மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

தொடர்ந்து ஆய்வு செய்வேன்!

தொடர்ந்து ஆய்வு செய்வேன்!

கோவை பாரதியார் பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் நேற்று (நவ.14) பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பின்னர் அங்குள்ள சுற்றுலா மாளிகையான சர்க்யூட் ஹவுஸுக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் ஆய்வுக் கூட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது எனப் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (நவ.15) பல்வேறு பகுதிகளில் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை காந்திபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை இன்று காலை 7 மணியளவில் ஆய்வு செய்த ஆளுநர், பின்னர் காந்திநகர் பேருந்து நிலையத்தில் உள்ள பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளித் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டார்.

இதையடுத்து, கோவை சவுரிபாளையத்தில் உள்ள தனியார் குடியிருப்புக்குச் சென்ற அவர், அங்கு பின்பற்றப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார். அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் உடன் இருந்தார்.

பின்னர் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தமிழில் வணக்கம் கூறித் தனது பேச்சைத் துவங்கினார்.

“தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சி அடையும். கோவை மிகவும் அழகான நகரம். தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் கோவையும் உள்ளது ” எனப் புகழாரம் சூட்டினார்.

மகாராஷ்டிராவை விட கோவையில் தூய்மைப் பணிகள் சிறப்பாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தூய்மை இந்தியா திட்டத்தைக் குடிசை பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறினார்.

களத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால்தானே அரசைப் பாராட்ட முடியும் எனத் தனது திடீர் ஆய்வு குறித்து ஆளுநர் விளக்கமளித்தார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017