மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஸ்டேட்டஸ் பார்த்தார்கள்: ஆகாஷ் வாக்குமூலம்!

ஸ்டேட்டஸ் பார்த்தார்கள்: ஆகாஷ் வாக்குமூலம்!

ஒருதலைக் காதலால் இளம் பெண்ணை எரித்துக் கொன்ற இளைஞர் தன்னைக் காதலிக்க மறுத்ததாலும், பெண்ணின் குடும்பத்தினர் ஸ்டேட்டஸ் பார்த்ததாலும் தீ வைத்து எரித்ததாகக் காவல் துறையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு இந்துஜா, நிவேதா என்ற மகள்களும் மனோஜ் என்ற மகனும் உள்ளனர். இந்துஜாவும், வேளச்சேரியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் பள்ளிப் பருவம் முதலே ஒன்றாகப் படித்துவந்துள்ளனர். இந்துஜாவை ஆகாஷ் ஒருதலையாகக் காதலித்துள்ளார். ஆகாஷின் காதலுக்கு இந்துஜா குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்துஜாவும் ஆகாஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். வேலைக்குச் செல்லும்போது ஆகாஷ் தொந்தரவு செய்யவே, எரிச்சல் அடைந்த இந்துஜா ஆகாஷைக் கண்டித்துள்ளார். பிறகு வேலைக்குச் செல்வதையும் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் திங்கள் கிழமை இரவு இந்துஜாவின் வீட்டுக்குச் சென்ற ஆகாஷ் இந்துஜாவைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கும்படி கேட்டுள்ளார். வேலையில்லாத உனக்குத் திருமணம் செய்துதர முடியாது என்று இந்துஜா குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதில் வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த ஆயிலை அவர்கள் மீது ஊற்றித் தீ வைத்துவிட்டு ஆகாஷ் தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பி ஓடிய இளைஞரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் “இருவரும் காதலித்தோம். திடீரென அவள் என்னை ஒதுக்கியதால் கொன்றேன்” என்று கூறியுள்ளார்.

“இந்துஜா ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தார். எனக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. வீட்டிலேயே இருந்தேன். சிறு வயது முதலே இந்துஜாவை நான் விரும்பினேன். அவரது குடும்பத்தினர் ஸ்டேட்டஸ் பார்த்து என்னை ஒதுக்கினர். ஆனால் இந்துஜாவை என்னால் மறக்க முடியவில்லை. நேற்று முன் தினம்கூட என்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சினேன். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே எனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணி ஆயிலை ஊற்றித் தீ வைத்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்துஜாவின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அவரது தாய்க்கு 50 சதவிகிதத்துக்கு மேல் தீ காயம் ஏற்பட்டதால் அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017