மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

மீண்டும் ஒரு வடசென்னை படம்!

மீண்டும் ஒரு வடசென்னை படம்!

வடசென்னை மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்யும் தீவிரமான படத்தைக் கூடிய விரைவில் இயக்குவேன் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

துப்புரவுத் தொழிலாளர்களின் வலியையும் அவல நிலையையும் எடுத்துக்கூறும் வகையில் புகைப்படக் கலைஞர் பழனிக்குமார் மலம் அள்ளும் தொழிலாளர்களின் புகைப்படத் தொகுப்பை "நானும் ஒரு குழந்தைதான்" என்ற தலைப்பில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கண்காட்சி நேற்று (நவம்பர் 14) மாலை நிறைவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். பழனிக்குமாருடன் ‘நீலம்’ அமைப்பும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்காட்சியின் நிறைவு விழாவில் கானா பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மலம் அள்ளும் தொழிலாளர்கள் அன்றாடம் படும் இன்னல்கள் குறித்து துவக்க விழாவின்போதே பல கருத்துக்களை ரஞ்சித் முன்வைத்திருந்தார். நிறைவு விழாவிலும் கலந்துகொண்ட அவர் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கானா இசை நிகழ்ச்சி குறித்து, "இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் மக்களின் சமமற்ற தன்மையை தங்களுடைய மொழியில் சென்னையினுடைய கானா பாடல் மூலம் இளைஞர்கள் வெளிப்படுத்தினார்கள். எந்த இசையுடனும் போட்டியிடக்கூடிய இசை கானா என்பதை இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். சோகம், துக்கம், மகிழ்ச்சி என்று நம் உணர்வுகள் அனைத்தையும் மிகவும் இயல்பாக, நாம் பேசும் மொழியிலேயே வெளிப்படுத்த இதைவிட பெரிய ஆயுதம் வேறொன்று இருக்காது என்று நம்புகிறேன். கானாவின் வலிமையே அதுதான்" என்று தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017