மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

இந்து தீவிரவாதம்: கமல் மீண்டும் ட்விட்!

இந்து தீவிரவாதம்: கமல் மீண்டும் ட்விட்!

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியைத் திணிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் நிலையில், விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆனந்த விகடனில் எழுதிவரும் அவர், அண்மையில் இந்து தீவிரவாதம் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்தச் சூழ்நிலையில் சிறுவன் ஒருவன் கமலின் புகைப்படத்தைக் கத்தியால் குத்துவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து நேற்று (நவம்பர் 14) கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச் சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்" என்று குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017