மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

புல்லெட் ரயில்: தற்காக்கும் மத்திய அரசு!

புல்லெட் ரயில்: தற்காக்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் புல்லெட் ரயில் திட்டமானது இந்தியாவின் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றுதான் என்று, அத்திட்டத்துக்கு எதிராகப் பெருகும் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் பொருட்டு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ ஏப்பும் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை -அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லெட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். இத்திட்டம் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக் கணக்கில் செலவிட்டு இந்த புல்லெட் ரயில் திட்டத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக ஏற்கெனவே மந்தமாக இயங்கிக் கொண்டிருக்கும் ரயில் சேவையை மேம்படுத்துவது சிறந்தது என்று பல்வேறு தரப்புகளிலிருந்து இத்திட்டத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த எதிர்ப்புகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் ரயில்வே துறை அமைச்சரான பியூஸ் கோயல் பதிலளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பேதுமே சுறுசுறுப்பாக இருக்கும் பியூஸ் கோயல் குவாரா தளத்தில், ’புல்லெட் ரயில் திட்டம் இந்தியாவுக்கு அவசியம்தானா?’ என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு 884 வார்த்தைகள் அடங்கிய விளக்கத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “இந்தியாவானது பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுடன் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது. அப்படிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில், ஏற்கெனவே இருக்கும் ரயில் சேவையை மேம்படுத்துவது மற்றும் புதிதாக அதிக ரயில் சேவைகளை ஏற்படுத்துவதும் அடங்கும். வருங்காலத்தில் மக்களுக்குச் சிறந்த, தரமான, அதிவேக மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்ட திட்டம் தான் புல்லெட் ரயில் திட்டம்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017