மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சீனாவின் புதிய சாதனை: மின்சாரக் கப்பல்!

சீனாவின் புதிய சாதனை: மின்சாரக் கப்பல்!

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கிப் புதிய சாதனையைச் சீனா படைத்துள்ளது.

ரெயில்வே, விண்வெளி மற்றும் அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் முன்னேறிவரும் சீனா, தற்போது நீர்வழிப் போக்குவரத்திலும் புதிய முயற்சியைச் செயல்படுத்தி முன்னேறிவருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டுவருகின்றன. கப்பல்கள் பொதுவாக டீசல், பெட்ரோல் மூலம்தான் இயக்கப்படும். ஆனால் சீனா தற்போது சரக்குக் கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சீனாவில் உள்ள குயாங்ஷு ஷிப்யார்டு என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல், மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது.

இந்தக் கப்பல் 70.5 மீட்டர் நீளமும், 600 டன் எடையையும் கொண்டுள்ளது. அதில் 2 ஆயிரம் டன் சரக்கு ஏற்றப்பட்டு மின்சாரம் மூலம் இயக்கப்பட்டது. கப்பலில் பொருத்தப்பட்ட 26 டன் லித்தியம் பேட்டரிகளில் 2 மணி நேரம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்யப்படும்.

மின்சார சரக்குக் கப்பலை இயக்கும் நிகழ்ச்சி குயாங்ஷு ஆற்றில் நடைபெற்றது. இந்தக் கப்பல் மணிக்கு 12.8 கி.மீ. வேகத்தில் 80 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து சோதனையில் வெற்றிபெற்றது.

இது குறித்து, ஹாங்க்ஜோச் நவீன ஷிப் டிசைன் & ரிசர்ச் கூட்டுறவு நிறுவனத்தின் தலைவரும் பொது மேலாளருமான ஹுவாங் ஜியாலின் கூறுகையில், கப்பல் முழுமையாக மின்சக்தி மூலம் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இந்தத் தொழில்நுட்பத்தின் சோதனை தற்போது வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் பயணிகள் மற்றும் கட்டுமானக் கப்பல்களிலும் பயன்படுத்தலாம் என்றார்.

க்வென்ஜோ ஷிபியார்ட் இன்டர்நேஷனலின் பொது மேலாளரான சென் ஜியின் கருத்துப்படி, இதனால், கப்பல் செலவுகளைப் பெரிதும் குறைக்க உதவும் "மின்சக்தியின் விலை பாரம்பரிய எரிபொருளை விடக் குறைவாக உள்ளது. புதிய எரிசக்தி சரக்குக் கப்பலின் முக்கிய செலவு, எவ்வளவு லித்தியம் பேட்டரி கொண்டிருக்கும் என்பதைச் சார்ந்துள்ளது.

மின்சாரக் கப்பலினால் 2,000 டன்னிற்கும் அதிகமான பொருட்களை எடுத்துச்செல்ல முடியும்” என்றார் சென்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017