மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

இந்தியாவுக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 18 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 7.42 லட்சமாக இருந்தது. 2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் சுமார் 8.76 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணிகள் வருகையில் இது 18.1 சதவிகித உயர்வாகும். அதிகபட்சமாக இந்தியாவில் பயணம் மேற்கொண்டவர்களில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் 21.66 சதவிகிதத்தினர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா (11.57 %), இங்கிலாந்து (10.23 %), இலங்கை (3.79 %), கனடா (3.36 %), ஜெர்மனி (3.17 %), ஆஸ்திரேலியா (3.07 %), ஃபிரான்ஸ் (2.81 %), ரஷ்யா (2.81 %) ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பயணிகள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017