மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

நந்திதா அழகின் ரகசியம்!

நந்திதா அழகின் ரகசியம்!

காத்திருப்போர் பட்டியல் படத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் தன்னை மிக அழகாகக் காட்டியிருப்பதாக அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நந்திதா ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

“இயக்குநர் ராஜசேகர் இந்த படத்தில் நடிக்க என்னைத் தொடர்புகொண்டபோது நான் ஏற்கனவே ஐந்து படங்களில் பிஸியாக நடித்துவந்தேன், மேலும் புதிய குழுவோடு பணியாற்றுவதில் தயக்கம் இருந்தது. ஆனால் அவரது தன்னம்பிக்கை என்னைக் கதையை கேட்க வைத்தது. கதை என்னை மிகவும் ஈர்க்க உடனே நடிக்க சம்மதித்தேன். எனது நடிப்புக்கு சவாலான கதாபாத்திரமாக இருக்கும் என நம்பினேன். தற்போது படத்தைத் திரையில் பார்க்கும்போது இயக்குநர் என்னிடம் என்ன உறுதியளித்தாரோ அதைச் செய்துகாட்டியுள்ளார் என்பதை உணர முடிகிறது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரேமிலும் என்னை அழகாகக் காட்டியுள்ளார்” என்று நந்திதா காத்திருப்போர் பட்டியல் அனுபவத்தைச் சுருக்கமாக பகிர்ந்துகொண்டுள்ளார்.

தன்னோடு இணைந்து நடித்துள்ள சச்சின் குறித்துப் பேசும்போது, “எனக்கும் அவருக்கும் அழகான சண்டைகள் படத்தில் வரும். அவை மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளன” என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017