மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ரெய்டு: கிருஷ்ணப் பிரியா ஆஜர்!

ரெய்டு: கிருஷ்ணப் பிரியா ஆஜர்!

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக சசிகலா உறவினர் கிருஷ்ணப் பிரியா உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

சசிகலா குடும்பத்தை மையமாக வைத்துக் கடந்த 9ஆம் தேதி தொடங்கப்பட்ட வருமான வரித்துறை சோதனையானது, ஐந்து நாட்கள் தொடர்ந்து நடந்து, 13ஆம் தேதி நிறைவுற்றது. அதையடுத்து விசாரணைக்காக ஜெயா டிவி சிஇஒ விவேக் வருமான வரி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். "வருமான வரித்துறை விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்பு அளிப்பேன்" என்றும் தெரிவித்தார். தொடர்ந்து ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென விவேக்கிற்கு, வருமான வரி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதில் விவேக்கின் சகோதரி கிருஷ்ணப் பிரியா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை தொடர்பாக விளக்கமளிக்க சசிகலா சகோதரர் திவாகரன், கிருஷ்ணப் பிரியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சூழ்நிலையில் வருமான வரி சோதனை தொடர்பாக விளக்கமளிக்க கிருஷ்ணப் பிரியா மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன், விவேக்கின் மற்றொரு சகோதரி ஷகிலா ஆகியோரும் இன்று ( நவம்பர் 15) நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவகத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து ஜெயா டிவி பொது மேலாளர் நடராஜனும் ஆஜரானார்.

இவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017