மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

சார்லி சாப்ளின் ஒன் லைன்!

சார்லி சாப்ளின் ஒன் லைன்!

பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் திரைப்படம் மறைந்த திரையுலக மேதை சார்லி சாப்ளினின் 125ஆவது பிறந்த தினத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் பிரபுதேவாவுடன் நிக்கி கல்ராணி, பாலிவுட் நடிகை அடா ஷர்மா ஆகியோர் நடிக்கின்றனர். அடா ஷர்மா சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

“சார்லி சாப்ளினின் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. தயாரிப்பாளர் டி.சிவாவும் நானும் காமெடி எண்டர்டெய்னராக உருவாக்கிவரும் இந்தப் படத்துக்கு சார்லி சாப்ளின் பெயரை வைப்பதை அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக கருதுகிறோம்” என்று டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

படத்தின் கதை பற்றிக் கூறிய அவர், “பிரபுதேவாவுக்கும் நிக்கி கல்ராணிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறுவதில் படம் தொடங்குகிறது. இந்த ஜோடியின் குடும்பத்தினர் திருப்பதி வந்து சேரும் முன் எதிர்பாராத சம்வங்களை சந்திக்கின்றனர். அவர்கள் வந்த பின் என்ன நடக்கிறது என்பதை காமெடியாக விவரித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017