மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

விவசாய நெருக்கடிக்குத் தீர்வு கிட்டுமா?

விவசாய நெருக்கடிக்குத் தீர்வு கிட்டுமா?

பூச்சிகளின் தாக்கம், போதிய மழைப்பொழிவு இல்லாதது போன்ற காரணங்களால் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயப் பணிக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா, மரத்வாடா பகுதிகளில் போதிய மழையின்மை, பூச்சிகளின் தாக்கம், பூச்சிக்கொல்லியில் விஷம் காரணமாக இந்த ஆண்டில் அதிக அளவில் பயிர்கள் சேதமடைந்ததாக அம்மாநில விவசாயப் பணிக்குழு கண்டறிந்துள்ளது. பருத்தி உற்பத்தியில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் 10,000 கோடியாக இருக்கும் என அக்குழுவின் தலைவர் கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார். திவாரி தலைமையிலான இந்த விவசாயப் பணிக்குழுவானது, அம்மாநிலத்தின் 60 லட்சம் விவசாயிகளுக்கு உணவு, நிதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை வழங்கி, அந்த அமைப்புக்குக் கீழுள்ள 14 கிராமங்களில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பாட்நாவிஸுக்கு உடனடி தீர்வு வேண்டி திவாரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் "போதிய மழையின்மை, பூச்சிக்கொல்லியில் விஷம், தவிரப் பருத்தி, சோயா, நெல் மற்றும் பருப்பு வகைப் பயிர்கள் பிங்க் போல்வார்ம் எனப்படும் பூச்சித் தாக்குதலால் விதர்பா மற்றும் மரத்வாடா பகுதிகளில் விவசாயம் மிகவும் சேதமடைந்துள்ளது. அதில் பூச்சிக்கொல்லியில் கலந்துள்ள விஷம் காரணமாக பாதிப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017