மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்!

அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்!

ஜி.எஸ்.டி. வரி தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய நிதியமைச்சர் பதவியை அருண் ஜெட்லி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (நவ.14) கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ குஜராத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அருண் ஜெட்லி, உங்களுக்குச் சுமையாக உள்ளார். ஒருவேளை அவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தால், வேறு ஒரு குஜராத்திக்கு ராஜ்யசபாவில் இடம் கிடைத்திருக்கும். அருண் ஜெட்லியை நான் குஜராத்தியாக ஏற்க மாட்டேன்.

குறுகிய நேரத்தில் பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி என இரு அதிர்ச்சிகளை இந்திய பொருளாதாரம் சந்தித்துள்ளது. நாட்டில் ஆழமான குறைபாடுள்ள வரி முறையை அமல்படுத்திவிட்டு அவர் நற்பெயர் வாங்கிக்கொள்ள முடியாது. நாட்டு மக்கள் தங்களுக்கு உள்ள உரிமையைப் பயன்படுத்தி அருண் ஜெட்லி தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்த வேண்டும்" எனப் பேசினார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017