மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

உயர் நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதி!

உயர் நீதிமன்றத்துக்குப் புதிய நீதிபதி!

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதியாக, ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ருகன புஜாஹரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேரைப் பணி மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று (நவம்பர் 14) அறிவித்தனர். அதில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அஷுத்தோஷ் குமார் பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி வேட் பிரகாஷ் வைஷ் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ருகன் புஜாஹரி சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சத்ருகன புஜாஹரி வரும் 20ஆம் தேதிக்குள் பதவியேற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது நியமனத்தைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017