மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஜிஎஸ்டி: வணிகர்களுக்கான ஆசீர்வாதம்!

ஜிஎஸ்டி: வணிகர்களுக்கான ஆசீர்வாதம்!

ஜிஎஸ்டி வரிக்கு எதிரான விமர்சனங்களை குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், “இன்னும் ஓராண்டுக்குள், ஜிஎஸ்டி வணிகர்களுக்கான ஆசீர்வாதமாக மாறும்” என்றிருக்கிறார் பாஜக தலைவர் அமித் ஷா.

குஜராத் தேர்தல் பிரசாரத்திற்காக நீண்ட நாட்களாக அங்கு முகாமிட்டிருக்கிறார் பாஜக தலைவர் அமித் ஷா. பிரதமர் மோடி தனது இரண்டாவது கட்டப் பிரசாரத்தை குஜராத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், ஜிஎஸ்டிக்கு எதிரான ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் விமர்சனத்திற்குப் பதிலளித்திருக்கிறார் அமித் ஷா.

“இன்னும் ஓராண்டுக்குள் வணிகர்களுக்கான ஆசீர்வாதமாக, ஜிஎஸ்டி மாறும். இதற்காகப் பிரதமர் மோடியே நேரடியாக இந்த விஷயத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். இதற்கான பலனை வருங்காலத்தில் மக்கள் நேரடியாகப் பார்ப்பார்கள். ஜிஎஸ்டிக்கு எதிராக ராகுல் தொடர்ந்து பேசிவருகிறார். அவர் ஏதேனும் வியாபாரம் செய்கிறாரா?” என்று கேட்டிருக்கிறார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017