மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

திருமணச் சீதனமாகப் பாம்பு!

திருமணச் சீதனமாகப் பாம்பு!

திருமணச் சீதனமாகப் பாம்பு வழங்கப்பட்ட சம்பவம் இலங்கையில் நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு இன மக்களிடையே பல்வேறு விதமான கலாச்சாரங்கள் இருக்கின்றன. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் பல சமூகங்கள் தமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை. அதிலும் பழங்குடி இன மக்கள், இதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள வவுனியா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான கலாச்சாரம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. வவுனியாவில் தெலுங்கு முறையில் வித்தியாசமான திருமணம் ஒன்று நடைபெற்றது. மல்காந்தி என்ற பெண்ணுக்கும் அரவிந்த் குமார் என்ற ஆணுக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி அவர்களுடைய பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர்.

பெரியோர்கள் முன்னிலையில் ரபான் அடித்து, பாசி மாலை அணிந்து, மோதிரம் மாற்றி திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும் என்று பலரும் வாழ்த்திச் சென்றனர்.

இந்தத் திருமணத்தின் பின்னர் மணமகளின் தந்தையினால் இருவருக்கும் பாம்பு மற்றும் பாம்பு பெட்டி சீதனமாக வழங்கப்பட்டது. இவர்கள், இதனூடாக வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று மணமகளின் தந்தை இருவரையும் வாழ்த்தினார். இங்குள்ள சமூகத்தில் சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்துவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017