மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

இணையத்தில் வைரலாகும் இலங்கை பவுலர்!

இணையத்தில் வைரலாகும் இலங்கை பவுலர்!

மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. நாளை முதல் (நவம்பர் 16) அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேசம் அணியும், பாகிஸ்தான் அணியும் நாளை மோதுகின்றன. நாளை மறுநாள் (நவம்பர் 17) இரண்டாவது அரையிறுதி போட்டியில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 3 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பினை இழந்தது.

இந்த தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இலங்கை வீரர் கெவின் கோத்திகோடா என்ற 18 வயது இளம் வீரர் புதுமையான பந்து வீச்சினால் இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் களமிறங்கிய முதல் போட்டியில் வித்தியாசமான முறையில் பந்தினை வீசியதால் பேட்ஸ்மேன்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் திணறினர். ஆனால் இரண்டாவது போட்டி பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்றது. அதில் அவரது பந்துவீச்சினை அழகாக கணித்து பாகிஸ்தான் வீரர்கள் எளிதில் ரன்களை சேர்க்கத் தொடங்கினர். பந்து வீசும் முறை பார்ப்பதற்கு கடினமாக தெரிந்தாலும், அவரது ஓவரில் எளிதாக ரன்களை சேர்க்க முடிந்தது என்பதே உண்மை.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017