மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ரஜினி கட்டிய தியான மண்டபம்!

ரஜினி கட்டிய தியான மண்டபம்!

இமயமலையில் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டிய ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்தின் கிரஹபிரவேச விழா விமரிசையாக நடைபெற்றதோடு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரஜினி ஆன்மிகப் பயணமாக அடிக்கடி இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர். பாபாவின் தீவிர பக்தரான இவர், தனது நண்பர்களான பெங்களூருவைச் சேர்ந்த ஹரி, சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன், டெல்லியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் ஸ்ரீதர் ராவ் ஆகியோருடன் இணைந்து இமயமலையில் தியான மண்டபம் கட்டியுள்ளார்.

பாபாவின் குகை அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் தோணகிரி மலைப்பகுதியில் ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 சதுர அடியில், சுமார் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் தியான மண்டபத்துடன் கூடிய பக்தர்கள் தங்குவதற்கான இடம் கட்டப்பட்டுள்ளது.

பரமஹம்ச யோகானந்தர் என்பவரால் நிறுவப்பட்ட யோகதாஸ் சஷ்டங்க சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் 100ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கட்டப்பட்டுள்ள இந்த தியான மண்டபத்தின் கிரஹபிரவேசம் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினியின் குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இது விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017