மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஆளுநருக்குத் தலைவர்கள் கண்டனம்!

ஆளுநருக்குத் தலைவர்கள் கண்டனம்!

கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகத் தமிழகத் தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்)

தமிழக ஆளுநர் கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பது வரம்பு மீறிய செயலாகும். அரசு விழாக்களில், பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர்கள் பங்கெடுப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், கோவை மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து திட்டங்கள் அமலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பது வரம்பு மீறிய செயலாகும்.

பாஜகவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட கைப்பாவையாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுவதாக இந்தச் செயல் அமைந்திருக்கிறது.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்)

தன்மானமோ, சுயகவுரவமோ அற்றதுபோல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பதை நிரூபணம் செய்யும் வகையில், ஆளுநரின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்)

தமிழகத்தின் உண்மையான முதல்வராக ஆளுநர்தான் செயல்படுகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்)

‘தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை எந்த ஆளுநரும் மாவட்ட நிர்வாகத்தில் தலையிட்டதில்லை. இது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இதேநேரம் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, “ஆளுநர் ஆய்வு செய்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்த தேவையில்லை. அதிகாரத்துக்குட்பட்டு தான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்குத் தெரியும். ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூற முடியாது” எனத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017