மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

இனி ரேஷனில் உளுந்து இல்லை!

இனி ரேஷனில் உளுந்து இல்லை!

ரேஷன் கடைகளில் இனி உளுத்தம்பருப்பு விநியோகிக்கப்பட மாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 34,774 ரேஷன் கடைகள் உள்ளன. இதை நம்பியே வாழும் ஏழை எளிய மக்கள் தமிழகத்தில் அநேகம் பேர் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் எந்நேரமும் கிடைப்பதில்லை.

குறிப்பாகக் கிராமப்புறங்களில் பருப்பு வகைகள் மற்றும் கோதுமை போன்ற பொருள்கள் வழங்கப்படுவதேயில்லை. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்துக்குப் பிறகு, ரேஷன் கடைகளில் இருந்த பட்டியலில் உளுத்தம்பருப்பு இருந்த இடம் அழிக்கப்பட்டுவிட்டது. மேலும், கடந்த நவம்பர் 1 முதல் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்ந்து விட்டது. இந்த நிலையில்தான் இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

சென்னையில் நேற்று (14.11.2017) செய்தியாளர்களைச் சந்தித்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அப்போது அவர் கூறியதாவது, “துவரம்பருப்பு, மசூல்பருப்பு, கன்னடியன் லென்டில், உளுத்தம்பருப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ஒரு கிலோ வீதம் வழங்குவதே தமிழக அரசின் இலக்கு. உளுத்தம்பருப்பு கொள்முதலை நிறுத்திவிட்டதால் இனி மற்ற மூன்று பருப்புகளில் ஏதாவது ஒன்று ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும். ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் குளறுபடி ஏதும் இல்லை. அந்தப் பணி மிக மிகத் துரிதமாக நடக்கிறது. இதுவரை 1 கோடியே 71 லட்சம் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 23 லட்சம் ரேஷன் அட்டைகளும் டிசம்பர் 15-க்குள் ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றித் தரப்பட்டு விடும். ஸ்மார்ட் கார்டில் ஏற்படும் சிறு சிறு தவறுகள் கண்டறியப்பட்டதுமே அவை ஓரிரு நாளில் சரி செய்யப்பட்டுத் தரப்படுகின்றன” என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். ரேஷனில் இனி உளுந்து இல்லை என்ற அறிவிப்பு பொது விநியோகத் திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017