மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

விலையேற்றத்தில் வெங்காயம் - தக்காளி!

விலையேற்றத்தில் வெங்காயம் - தக்காளி!

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை ரூ.40 முதல் ரூ.50 வரையில் உயர்ந்துள்ளது. அதேபோல, தக்காளி விலை ரூ.60 வரை சென்றது. இவற்றின் விலையேற்றம் சாதாரணமான ஒன்றுதான் என்றாலும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் விலையேற்றம் அசாதாரணமாக இருந்துள்ளது. தக்காளியின் விலை வழக்கத்துக்கு மாறாகத் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த விலையேற்றம், தொடர்ந்து உயர்ந்து வருவது 2013ஆம் ஆணடுக்குப் பிறகு இதுவே முதன்முறையாகும்.

நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத் தகவலின்படி, கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியா முழுவதும் தக்காளியின் விலை சராசரியாக ரூ.60 வரையில் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் உயரத் தொடங்கிய வெங்காயத்தின் விலை 26 ரூபாய் உயர்ந்து, இந்தியா முழுவதும் சராசரியாக ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வுக்கு, விநியோகத் தடை காரணமாக இருக்காது என்றே கருதப்படுகிறது. காரணம், ஆண்டு முழுவதும் மொத்த விற்பனை சந்தைகளுக்கு இதன் வரத்து நிலையாகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் குறைவாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் கூட சீரான நிலையில் தான் இருந்தது.

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் தகவலின்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மொத்த விற்பனைச் சந்தைகளுக்கு வந்த வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதில் அக்டோபர் மாத வரத்து மட்டும் கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் குறைவாகும். ஆனால், விநியோகச் சங்கிலியைப் பொறுத்தவரை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகரித்துள்ளது. எனவே, இந்த விலையேற்றத்துக்கு வெங்காயத்தின் வரத்துக் குறைபாடு காரணமாக இருக்காது. இதில் தக்காளி மட்டும் சற்று மாறுபடுகிறது. இதில் விலை உயர்வு, மொத்த விற்பனைச் சந்தைகளில் காய்கறிகளின் வரத்து வீழ்ச்சியடைந்ததை விட மிக அதிகமாக இருக்கும். ஜூலை மாதம் தக்காளி வரத்து 18 சதவிகிதமும், ஆகஸ்ட் மாதம் 39 சதவிகிதமும், செப்டம்பர் மாதம் 1 சதவிகிதமும், அக்டோபர் மாதம் 5 சதவிகிதமும் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் 6 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

குறைந்து வரும் சாகுபடி, பூச்சித் தாக்குதல்கள், விளைச்சல் சரிந்தது, ஒழுங்கற்ற வானிலை, பருவகால மாற்றங்களால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் ஏற்பட்ட மாற்றமே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையேற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியா முழுவதும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் சராசரியாக கிலோவுக்கு ரூ.10, செப்டம்பர் மாதம் ரூ.8.20, அக்டோபர் மாதம் ரூ7.50 அதிகரித்துள்ளது. இதேபோல, வெங்காயத்தின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலையும் ஜூலை மாதத்துக்குப் பிறகு கணிசமாக உயர்ந்துள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017