மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

விஷால் அரசியலுக்கு வரலாம்: கார்த்தி

விஷால் அரசியலுக்கு வரலாம்: கார்த்தி

‘விஷாலுக்கு அரசியல் பொருத்தமாக இருக்கும். அவர் அரசியலுக்கு வரலாம்’ என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் ஒன்றும் புதிதில்லை என்றாலும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த விவாதம் அதிகளவில் நடைபெறுகிறது. நடிகர்களின் செயல்பாடுகளும் அரசியலுக்கான காய் நகர்த்துதலாகவே பார்க்கப்படுகிறது. இப்போதுள்ள சூழலில் அரசியலுக்கு எந்த நடிகரெல்லாம் வரக்கூடும் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் அது நீண்டுகொண்டே செல்லும். இதில் ரஜினி, கமல் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். கமல் பல்வேறு செயல்பாடுகள் மூலம் முன்னணியில் இருக்கிறார். இருபது வருடங்களாக ரஜினி புதிர்போட்டு வந்தாலும் இப்போதுள்ள சூழலில் அவர் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் தெலுங்கு பதிப்பான ‘காக்கி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நவம்பர் 13 அன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அவரிடம், ‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கார்த்தி, “எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, அரசியலுக்கு வருவதற்கு எனக்கு நேரமில்லை” என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017