மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

ஜாஸ் சினிமாஸ் கைமாறியது எப்படி?

ஜாஸ் சினிமாஸ் கைமாறியது எப்படி?

ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை இரண்டு நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென விவேக்குக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சசிகலாவின் உறவினர்களுக்குச் சொந்தமான 190 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள ஜெயா டி.வி. சிஇஓ விவேக்கின் இல்லம், அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா இல்லம், அண்ணா நகரிலுள்ள விவேக் மாமனார் பாஸ்கரன் வீடு என சோதனை மொத்தமும் விவேக்கை குறிவைத்தே நடத்தப்பட்டது. ஐந்து நாள்களாக நீடித்துவந்த சோதனையானது கடந்த 13ஆம் தேதி நிறைவுற்றது. முடிவில் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் விவேக்கை அழைத்துச் சென்றனர்.

விசாரணை குறித்து நேற்று விளக்கமளித்த விவேக், “வருமான வரி அதிகாரிகள் மீண்டும் விசாரித்தால் ஒத்துழைப்பு தருவேன்” என்றும், தான் முறையாக வருமான வரி கட்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் நேற்று (நவம்பர் 14) ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை இரண்டு நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென ஜெயா டி.வி தலைமை செயல் அதிகாரி விவேக்குக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜாஸ் சினிமாஸின் 11 திரையரங்குகளும் குத்தகைக்கு பெறப்பட்டதா அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டதா என்பது தொடர்பாகவும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜாஸ் சினிமாஸை விற்பனை செய்த சத்யம் சினிமாஸ் நிறுவனமும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 நவ 2017