மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

பத்மாவதி: நெகிழ்ந்த தீபிகா படுகோன்

பத்மாவதி: நெகிழ்ந்த தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவதி திரைப்படம் வெளிவரும் முன்னரே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது. ‘தன் வாழ்நாளில் பத்மாவதியில் பணியாற்றியது மறக்க முடியாத பயணம்’ என்று நெகிழ்ந்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.

சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவதி குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தீபிகா அளித்துள்ள பேட்டியில், “இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர், பாடல் என அனைத்தையும் மக்கள் விரும்பியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது நம்பமுடியாத, என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத பயணம். பத்மாவதி படம் வெளிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அது பற்றி கூறிய தீபிகா, “எல்லோரும் பாராட்டும் வகையில் பாடல் அமைந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். மேலும் எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று” என்று தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017