மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 நவ 2017

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

லியோனியின் பட்டிமன்றத்திலிருந்து ஒரு கலகலப்பு:

பேச்சாளர்: அண்டங்காக்கா கொண்டைக்காரி பாட்டு, ஒரு சாமி பாட்டாகும்?

லியோனி: என்னய்யா சொல்ற? அது சினிமா பாட்டய்யா.

பேச்சாளர்: அண்டம் என்றால் உலகம், காக்கை என்றால் காப்பவள், கொண்டை வைத்த மீனாட்சியை அண்டங்காக்கை கொண்டைக்காரி என கவிஞன் பாடியுள்ளான் நடுவரே.

லியோனி: அது சரி! அப்புறம் ஐயாரெட்டு சொல்லுக்காரியும் சாமி பாட்டாய்யா?

பேச்சாளர்: நடுவர் அவர்களே... அஞ்சென்றால் நமசிவாய, ஆறு என்றால் சரவணபவ, எட்டென்றால் ஓம்நாராயணநம இதுதான் ஐயாரெட்டு சொல்லுக்காரி,

லியோனி: அடேயப்பா! இந்த ரண்டக்கா ரண்டக்கா ரண்டக்கா னா என்னப்பா? இதுவும் சாமி தானா?

பேச்சாளர்: சிவனுக்கு இரு மனைவி அங்க போனா ரெண்டு அக்கா, முருகன் வீட்ல ரெண்டு அக்கா, பெருமாள் வீட்ல ரெண்டு அக்கா ...

அதான் ரண்டக்கா ரண்டக்கா ரண்டக்கா போதுமா நடுவரே?

லியோனி: அய்யா சாமி... போதும்யா உங்க விளக்கம், நாங்க நம்பிட்டோம்! இது சாமி பாட்டேதான்!

ஆஹா... என்ன ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சி. இதை படிக்கும்போது, எழுதும்போதே இப்படி எழுதிட்டாங்களா, இல்ல எழுதிட்டு காரணம் கண்டுபிடிச்சாங்களான்னு தெரியல.

இன்னும் ஒமகசீயா ஒமயாகா..

முக்காலா முக்காபுலா லைலா,

அட்ரா அட்ரா நாக்கமூக்க

இதுக்கெல்லாமே இன்னும் அர்த்தம் தெரியல.. யப்பா ராசா.. அப்படியே அதையும் கொஞ்சம் விளக்கம் கொடுத்து தமிழ்த் திரைப்படத்தையும், தமிழ் உலகத்தையும் வாழ வெச்சிட்டுப் போப்பா.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 15 நவ 2017